இந்திய மீனவர்கள் 360 பேரை விடுவிக்கும் பாகிஸ்தான்

இந்திய மீனவர்கள் 360 பேரை விடுவிக்க பாகிஸ்தான் தீர்மானம்

by Bella Dalima 06-04-2019 | 6:07 PM
பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 360 பேரை அந்நாடு விரைவில் விடுதலை செய்யவுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 360 மீனவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தமது தண்டனைக்காலத்தை சிறையில் நிறைவு செய்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இம்மாதம் 4 பிரிவுகளாக விடுதலை செய்யப்படவுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தானுக்கிடையேயான உறவில் விரிசல் அதிகமாகியிருந்த போதிலும், இந்த விடுவிப்பு செயற்பாட்டை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.