ரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்

ரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்

by Bella Dalima 06-04-2019 | 5:25 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 10 ஆம் திகதி மும்பையில் தொடங்குகிறது. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கான போட்டோ ஷுட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டோ ஷுட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் நேற்று முன்தினம் கசிந்ததால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். கசிந்த புகைப்படங்களின் மூலம், பொலிஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்களில் பொலிஸ் உடையின் மேல் பிரவுன் நிற கோர்ட் அணிந்துகொண்டு, கையில் கத்தியுடன் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும் மகளாக நிவேதா தாமஸும் நடிக்கவுள்ளனர். நிவேதா தாமஸ், ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.