தனிநபர் தேசிய உற்பத்தியில் இலங்கையுடன் சமநிலையில் இருந்த தென் கொரியா: இன்றைய நிலை என்ன?

தனிநபர் தேசிய உற்பத்தியில் இலங்கையுடன் சமநிலையில் இருந்த தென் கொரியா: இன்றைய நிலை என்ன?

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2019 | 8:19 pm

Colombo (News 1st) ஊழல் மோசடியுடன் கூடிய நாடாக இலங்கையை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயன்று வருகின்ற நிலையில், இலங்கையுடன் சமநிலையிலுள்ள ஏனைய நாடுகள் உலகில் பல வெற்றிகளை ஈட்டி வருகின்றன.

உலகம் எம்மை கைவிட்டு முன்னோக்கி பயணித்த வண்ணமுள்ளது.

1960 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தனிநபர் தேசிய உற்பத்தி 142.2 அமெரிக்க டொலராகக் காணப்பட்ட போது, தென் கொரியாவின் தனிநபர் தேசிய உற்பத்தி 158.2 அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.

அதற்கமைய, 1960 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான தனிநபர் தேசிய உற்பத்தியில் சிறிய வேறுபாடொன்றே காணப்பட்டது.

2000 ஆம் ஆண்டளவில் தென்கொரியாவின் தனிநபர் தேசிய உற்பத்தி 11,947 அமெரிக்க டொலர் வரை உயர்வடைந்ததுடன், அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் தனிநபர் தேசிய உற்பத்தி 870 அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.

2017 ஆம் ஆண்டு இந்த இடைவௌி மேலும் அதிகரித்ததுடன், தென் கொரியாவின் தனிநபர் தேசிய உற்பத்தி 29,742 அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்ததுடன், இலங்கையின் தனிநபர் தேசிய உற்பத்தி 4 065. 2 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்திருந்தது.

அதன் பிரகாரம், 1960 ஆம் ஆண்டில் காணப்பட்ட தனிநபர் தேசிய உற்பத்தி புள்ளிவிபரங்களுக்கு அமைய, தென்கொரியாவுடன் சமநிலையிலிருந்த இலங்கையின் தனிநபர் தேசிய உற்பத்தி, அந்நாட்டு தனிநபர் தேசிய உற்பத்தியில் 7.1 ஆக தற்போது காணப்படுகின்றது.

60 வருடங்களுக்குள் தென் கொரியா உலகளாவிய ரீதியில் முன்னோக்கி சென்றுள்ளதுடன், இலங்கை நாளுக்கு நாள் பின்னோக்கி பயணிப்பதற்கான காரணம் என்ன?

சட்டவாட்சியை உறுதி செய்து, ஊழல் மோசடியை ஒழித்து, கிராமிய மக்களுக்கான முறையான திட்டங்களை அவர்கள் முன்னெடுப்பதே இதற்கு காரணமாகும்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் அதற்கு பதிலாக, தமக்கு நன்மை பயக்கும் வகையில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதுடன், சட்டவாட்சியை நாளாந்தம் சீர்குலைத்து, நாட்டு மக்களை ஏமாற்றும் செயற்பாட்டிலேயே ஈடுபட்டுள்ளனர்.​


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்