மனைவிக்கு $35bn விவாகரத்து இழப்பீடு வழங்கும் ஜெஃப்

மனைவிக்கு 35 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விவாகரத்து இழப்பீடு வழங்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

by Bella Dalima 05-04-2019 | 5:23 PM
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ( Jeff Bezos) தனது மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையை இழப்பீடாகப் பெற்று விவாகரத்து வழங்கத் தயார் என ஜெஃப் பெசோஸின் மனைவி மெக்கன்ஸி பெசோஸூம் அறிவித்துள்ளார். அத்துடன், ஜெஃப்-இற்கு சொந்தமான விண்வெளிச் சுற்றுலா நிறுவனமான ப்ளூ ஒரிஜின் மற்றும் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனங்களில் தமக்குள்ள பங்குகளை ஜெஃப் பெசோஸிடம் கையளிப்பதாகவும் மெக்கன்ஸி தெரிவித்துள்ளார். இருப்பினும், அமேசான் நிறுவனத்தில் மெக்கன்ஸிக்கு உள்ள 4 சதவீத பங்கை அவர் தொடர்ந்தும் வைத்திருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் அலெக் வொலின்ஸ்டைன் மற்றும் அவரது மனைவி ஜோசலினுக்கிடையேயான விவாகரத்திற்கு வழங்கப்பட்ட 3.8 பில்லியன் டொலர் இழப்பீடே இதுவரை அதிகளவிலான இழப்பீடாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது ஜெஃப் பெசோஸ் 35 பில்லியன் டொலர்கள் வழங்கி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.