தரம் 8 இல் திறமையை அடையாளங்காணும் பரீட்சை

புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக தரம் 8 இல் திறமையை அடையாளங்காணும் பரீட்சை: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 05-04-2019 | 3:34 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக தரம் 8 இல் திறமையை அடையாளங்காண்பதற்கான பரீட்சையை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட பாடத்திட்டங்கள் ஊடாக, உயர் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கூறியுள்ளார். மாணவர்கள் தமது திறமைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், புலமைப்பரிசில் பரீட்சை முறையை நீக்கி புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். கடவத்தை மஹாமாயா மகளிர் பாடசாலையில் புதிய கட்டடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்