பண்டாரகம பிரதேச சபை அமர்வில் அமளிதுமளி

by Staff Writer 05-04-2019 | 8:35 PM
Colombo (News 1st) ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மோதல் காரணமாக பண்டாரகம பிரதேச சபையின் இன்றைய அமர்வு சூடுபிடித்தது. பண்டாரகம பிரதேச சபையின் இன்றைய சபை அமர்வுகள் தவிசாளர் தேவேந்தர பெரேரா தலைமையில் இடம்பெற்றன. சபைக்கு சொந்தமான பொதுச்சந்தை கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்ட காலகட்டத்தில், அந்த காணியில் வாழ்ந்த குடும்பத்திற்கு கடை ஒன்றினை வழங்குவது தொடர்பிலான பிரேரணை ஒன்றை முன்வைத்தார். எனினும், இந்த பிரேரணையை சபை தவிசாளர் நிராகரித்ததையடுத்து சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.