வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானம்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானம்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

05 Apr, 2019 | 3:27 pm

Colombo (News 1st) ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் 5 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்