English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Apr, 2019 | 4:15 pm
Colombo (News 1st) பெட்ரோலிய வளத்துறை அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைதான அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்டை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என சட்ட மா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி தெமட்டகொட பகுதியிலுள்ள பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைமையகத்திற்குள் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதுடன், அதில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
21 Apr, 2022 | 03:49 PM
24 Sep, 2021 | 03:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS