ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு மேலும் கால அவகாசம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு மேலும் கால அவகாசம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு மேலும் கால அவகாசம்

எழுத்தாளர் Bella Dalima

05 Apr, 2019 | 5:31 pm

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்காக மேலும் 12 மாத கால அவகாசம் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் ட்ஸ்க் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுதியுடன் பிரித்தானியா மிக விரைவில் விலகுவதற்கான பரிந்துரையாக அமைந்துள்ளதென ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கிடையிலான மாநாட்டில் அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளது.

ஏப்ரல் 12 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான திகதியாக முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் அதற்கான ஆதரவு இதுவரை வழங்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்