புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 04-04-2019 | 6:08 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், பதவி விலகுவதாகக் கூறிய மலைநாட்டு அரசியல்வாதிகள் தற்போது மௌனமாகிவிட்டதாகவும் அப்பாவி மக்களைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற வேண்டாம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். 02. லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி தலைமறைவாகியமைக்கு அப்போதைய கடற்படைத்தளபதியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியமைக்கான ஆதாரமுள்ளதாக CID அறிவித்துள்ளது. 03. துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 04. அவுஸ்திரேலியாவிலிருந்து பசுக்களை இறக்குமதி செய்யும்போது பயன்படுத்திய ஆவணங்களை கையளிக்குமாறு, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அறிவித்துள்ளது. 05. போதையிலிருந்து விடுபட்ட நாட்டிற்கான சித்திரை மாத உறுதிமொழி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்காவின் சிக்காகோ நகரில், வரலாற்றில் முதற்தடவையாக கறுப்பினத்தைச் சேர்ந்த லோரி லைட்புட் (Lori Lightfoot) முதலாவது பெண் மேயராகியுள்ளார். 02. வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விளையாட்டுச் செய்தி 01. மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமைக்காக இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான திமுத் கருணாரத்னவுக்கு அபராதம் விதிப்பதற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.