ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Apr, 2019 | 10:00 am

Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 100 போட்டிகளை வெற்றிகொண்ட முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பதிவாகியுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

வங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முதல் 5 விக்கெட்களும் 89 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்