விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல்

வரட்சியான வானிலை: விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல்

by Staff Writer 03-04-2019 | 8:27 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் வரட்சியுடனான வானிலை காரணமாக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் விவசாயிகள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரட்சியினால் நாட்டின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைமை காலநிலை விஞ்ஞானி ரஞ்சித் புண்ணியவர்தன தெரிவித்துள்ளார். சிறுபோகத்தில் நெல் அறுவடை உள்ளிட்ட இடைக்கால பயிர் அறுவடைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரட்சியினால் ஒரு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வரட்சி காரணமாக பல பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். நீர் தேவை காணப்படும் பகுதிகள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் அல்லது இடர் முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, நாளை மறுதினம் முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.