மக்களுக்கு பிரயோசனமில்லாத வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்போம்: சுனில் ஹந்துன்நெத்தி

by Bella Dalima 03-04-2019 | 9:25 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (05) இடம்பெறவுள்ளது. வாக்கெடுப்பின் பொழுது தாம் செயற்படவுள்ள விதம் குறித்து சில கட்சிகளினுடைய பிரதிநிதிகள் கருத்து வௌியிட்டனர். நாட்டை கடன் சுமைக்குள்ளாக்கும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் என்ன செய்வது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார். அரசியல் சதித்திட்டங்களைத் தீட்டுவோருக்கு செயற்குழு கூட்டத்திற்கு சென்று கல்லடிக்க வேண்டிய அவசியம் இல்லை என சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார். மக்களுக்கு 3 சதத்திற்கும் பிரயோசனமில்லாத இந்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு எதிர்ப்பைத் தெரிவித்ததோ, அவ்வாறே மூன்றாம் வாசிப்பிற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியுமான எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும் அதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னுரிமை வழங்கி ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பது தொடர்பில் சிந்திக்கும். எனினும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்காக வாக்களிப்பதனால், அவர்களுக்கு போதுமான வாக்குகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார குறிப்பிட்டார். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒருபோதும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காது என அவர் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்