by Staff Writer 03-04-2019 | 4:29 PM
Colombo (News 1st) பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றத்திற்கான வீதி பொல்துவ சந்தியுடன் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்ல, இராஜகிரிய மற்றும் பொல்துவ சந்தியை அண்மித்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2000-க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் பொலிஸார் கூறினர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக சமூகவியல் மற்றும் மொழிப் பீடத்திற்கு தகுதி பெற்ற 33 மாணவர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து மாணவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.