செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 03-04-2019 | 6:20 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களின் சம்பளத்தை பெருமளவு அதிகரித்து 2014 ஆம் ஆண்டு CEB இனால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்தை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் எழுத்தாணை பிறப்பித்துள்ளது. 02. மின் துண்டிப்பு தொடர்பான அறிக்கையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு வழங்காமைக்கான காரணங்களை முன்வைப்பதற்கு எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு CEB க்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 03. சர்வதேச சமூகம் தனிப்பட்டவர்களின் சலுகைகளுக்கு உட்படாமல் உண்மையைக் கண்டறிய செயற்பட வேண்டும் என வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 04. 120 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்தமை தொடர்பில், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கணக்காய்வாளர் ஒருவருக்கு 37 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 05. ஏழு போக்குவரத்து குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 25,000 ரூபா அபராதம் அறவிடுவதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 06. போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அரசின் அனைத்து சட்டத்தரணிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. காணாமல்போன சிறிய ரக விமானத்தில் பயணித்த ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. 02. வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்வார் என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.