சிக்காகோவின் முதலாவது பெண் மேயரானார் லோரி லைட்புட்

சிக்காகோவின் முதலாவது பெண் மேயரானார் லோரி லைட்புட்

by Chandrasekaram Chandravadani 03-04-2019 | 3:22 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் சிக்காகோ நகரில், வரலாற்றில் முதற்தடவையாக கறுப்பினத்தைச் சேர்ந்த லோரி லைட்புட் (Lori Lightfoot) முதலாவது பெண் மேயராகியுள்ளார். அரசியலில் முன் அனுபவமற்ற லோரி லைட்புட் ஒரு முன்னாள் சட்டத்தரணி ஆவார். மேயர் தேர்தலில் லோரி லைட்புட்டுக்கு போட்டியாக சுமார் 13 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்த நிலையில், இவர் 74 வீதத்திற்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அத்தோடு, லோரி லைட்புட்  நகரின் முதலாவது  ஓரினச்சேர்க்கையாளர் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.