சம்பளப் பிரச்சினையை வைத்து மலையக அமைச்சர்கள் அரசியல் இலாபம் தேடுகின்றனர்: மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு

by Bella Dalima 03-04-2019 | 9:43 PM
Colombo (News 1st) பெருந்தோட்ட கைத்தொழில், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், பதவி விலகுவதாகக் கூறிய மலைநாட்டு அரசியல்வாதிகள் தற்போது மௌனமாகிவிட்டதாகவும் அப்பாவி மக்களைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற வேண்டாம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி, நியாயமான சம்பளத்திற்கு செல்ல வேண்டும் என தான் கூறியதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.