ஹொரணையில் ஈசி – கேஷ் மூலம் ஹெரோயின் கடத்தல்: ஒருவர் கைது

ஹொரணையில் ஈசி – கேஷ் மூலம் ஹெரோயின் கடத்தல்: ஒருவர் கைது

ஹொரணையில் ஈசி – கேஷ் மூலம் ஹெரோயின் கடத்தல்: ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2019 | 10:32 am

Colombo (News 1st) ஹொரணை – கல்எதடுகொட பகுதியில் ஈசி – கேஷ் முறையில் பணம்பெற்று ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் ஹொரணை மற்றும் வெலிக்கல ஆகிய பகுதிகளில் 3 வாடகை வீடுகளில் போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர் வசமிருந்த 25 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

ரத்னபுரி மிஹிதுகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இந்த சந்தேகநபர் காரொன்றில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே தங்கச்சங்கிலி கொள்ளை மற்றும் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்