மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்

மன்னார் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்

by Staff Writer 02-04-2019 | 4:51 PM
Colombo (News 1st) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை கடத்தி, காணாமல் ஆக்கியமை தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மன்னார் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கெஸ்பேவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த நேற்று (01) அழைக்கப்பட்டார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரைக் கடத்தி, காணாமல் ஆக்கியதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.