7 போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா அபராதம்

ஏழு போக்குவரத்து குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 25,000 ரூபா அபராதம்: வர்தமானி வௌியீடு

by Staff Writer 02-04-2019 | 4:19 PM
Colombo (News 1st) ஏழு போக்குவரத்து குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 25,000 ரூபா அபராதம் அறவிடுவதற்கான வர்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தெரிவித்துள்ளது. இதனூடாக போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரை ஓட்டுநராக பணிக்கு அமர்த்துதல், மதுபானம் அல்லது ஏனைய போதைப்பொருளை பயன்படுத்தி விட்டு வாகனம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு அறவிடப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் கடவையில் முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்துதல், செல்லுபடியான காப்புறுதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக 25,000 ரூபா முதல் 30,000 ரூபா வரை அபராதம் அறிவிடப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.