UPDATE: 769 கிலோகிராம் கொக்கெய்ன் பகிரங்கமாக அழிப்பு

by Fazlullah Mubarak 01-04-2019 | 1:27 PM
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் பணியகம் 4 சந்தர்ப்பங்களில் கைப்பற்றிய 769 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் இன்று (இரண்டாம் திகதி) பகிரங்கமான ஜனாதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ் களனி கோனவலயில் அமைந்துள்ள களஞ்சியசாலை வளாகத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி 926 கிலோகிராம் கொக்கெய்ன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வைத்து அழிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்த கப்பலில் இருந்து குறித்த கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.