இலங்கையில் அமெரிக்க இராணுவத்தளம் அமைப்பது தொடர்பில் அமெரிக்கத் தூதரகம்

by Staff Writer 01-04-2019 | 9:37 PM
Colombo (News 1st) இலங்கையில் அமெரிக்கா, இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை எனவும் எதிர்காலத்தில் அமைக்கும் திட்டமில்லை எனவும் அமெரிக்கத் தூதரகம் தௌிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவியபோது இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தளமோ வேறு கட்டடமோ அமைப்பதற்கான எவ்விதத் திட்டமும் இல்லை என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.