காலியில் தடம் புரண்டது காலு குமாரி கடுகதி ரயில்

காலியில் தடம் புரண்டது காலு குமாரி கடுகதி ரயில்

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2019 | 10:45 am

Colombo (News 1st) பெலியத்தவில் இருந்து மருதானை வரையில் சேவையில் ஈடுபடும் காலுகுமாரி கடுகதி ரயில், காலி ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று (16ஆம் திகதி) காலை தடம்புரண்டுள்ளது.

இதனால் கரையோர ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலொன்று நுகேகொட மற்றும் நாரஹென்பிட்டவுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது.

தடம்புரண்ட குறித்த இரு ரயில்களையும் தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.