உலக வங்கியின் புதிய நிதியுதவித் திட்டம்

உலக வங்கியின் புதிய நிதியுதவித் திட்டம்

உலக வங்கியின் புதிய நிதியுதவித் திட்டம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

15 Apr, 2019 | 8:29 am

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கம் நாட்டின் 11 உலர் வலயங்களின் காலநிலைக்கு ஏற்ற விவசாய செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.

இதன்மூலம் சுமார் 62,000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைய முடியுமென நிதியமைச்சு தெரிவிக்கின்றது.

காலநிலை மாற்றத்தால் விவசாயத்தில் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

பொலன்னறுவை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, குருநாகல், மொனராகலை, முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.