வரட்சியான வானிலையால் பெருமளவான மக்கள் பாதிப்பு

வரட்சியான வானிலையால் பெருமளவான மக்கள் பாதிப்பு

by Staff Writer 31-03-2019 | 8:08 AM
Colombo (News 1st) நிலவும் வரட்சியுடனான வானிலையால் 56,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணைங்களை வழங்குவதற்காக, பிரதேச செயலாளர் பிரிவுகளூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வரட்சி நிலவும் பகுதிகளில், குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்க முடியும் எனவும் நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, வரட்சியுடனான வானிலையுடன், வனப்பகுதிளுக்கு தீ மூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், இது குறித்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.