சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 31-03-2019 | 6:20 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்ட வௌிநாட்டுத் தூதுவர்கள் 14 பேருக்கான உயர் பதவிகளுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 02. நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீனக் குழுவை உதாரணமாகக் கொண்டு கலப்பு நீதிமன்றத்தினை அமைக்க முடியும் என சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். 03. மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியதனூடாக அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன என அரசாங்கம் கருதுவதாக வீ.ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 04. 2019 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சில மதிப்பீடுகள் குறிப்பிடப்படவில்லை என பாராளுமன்ற நிதிக்குழு தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் மூன்றாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது. 02. தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என தி.மு. க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்தி 01. IPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரேயொரு வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் பதிவாகியுள்ளார்.