இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

by Staff Writer 31-03-2019 | 9:41 AM
Colombo (News 1st) இலங்கைப் பிரஜைகள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2015 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை 36,995 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.