முதலீட்டாளர்களை சந்திக்க ஓமான் செல்லும் கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம

by Staff Writer 30-03-2019 | 3:31 PM
Colombo (News 1st) வௌிநாட்டு முதலீட்டை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அமைச்சர்களான கபீர் ஹாசிம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் ஓமானுக்கு செல்லவுள்ளதாக இன்றைய டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நாட்டிற்கு விஜயம் செய்வதே வழமையாகும். எனினும், வேறு நோக்கத்திற்காகவா முதலீட்டை பெற்றுக்கொள்ளும் போர்வையில்அமைச்சர்கள் இருவரும் ஓமானுக்கு செல்லவுள்ளார்கள் என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. சர்ச்சைக்குரிய ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில், அந்த திட்டம் தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான பின்புலத்தில் அமைச்சர்கள் இருவரும் ஓமானுக்கு செல்லவுள்ளமையானது, குறித்த குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கான முயற்சியா என்பதும் சந்தேகத்திற்குரியதாகும். ஓமான் முதலீட்டாளர் மாத்திரமின்றி தென்னிந்தியாவின் அரசியல்வாதிக்கும் சொந்தமான நிறுவனத்துடன் தொடர்புடைய இந்த வேலைத்திட்டம் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வேலைத்திட்டம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்திற்குரிய நிலைமை தொடர்பில் உள்நாட்டு, சர்வதேச ஊடகங்கள் மற்றும் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பியிருந்தன. எனினும், அந்த கேள்விகளுக்கு எவ்வித பதிலையும் வழங்காத அரசாங்கம், சூட்சுமமாக அமைச்சர்கள் இருவரை ஒமானுக்கு அனுப்ப முயற்சிக்கின்றமை உண்மையை மறைப்பதற்கா,அல்லது வேறு ஏதும் திட்டமிடப்பட்ட கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான முயற்சியா எனும் சந்தேகம் எழுகின்றனது.