வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குளறுபடிகள்: பாராளுமன்ற நிதிக்குழு தெரிவிப்பு

வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குளறுபடிகள்: பாராளுமன்ற நிதிக்குழு தெரிவிப்பு

வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குளறுபடிகள்: பாராளுமன்ற நிதிக்குழு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2019 | 3:37 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சில மதிப்பீடுகள் குறிப்பிடப்படவில்லை என பாராளுமன்ற நிதிக்குழு தெரிவித்துள்ளது.

சில மதிப்பீடுகளில் குளறுபடிகள் காணப்படுவதாகவும் நிதிக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அரச நிதி செயற்குழுவின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனினால் இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெட்ரோலிய வளத்துறை ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு நேற்று (29) பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், ஆதரவாக 84 வாக்குகளும் எதிராக ஓர் வாக்கும் கிடைத்திருந்தன.

மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சிற்கான ஒதுக்கீடும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்