மீண்டும் வெளியாகிறது சேரனின் திருமணம் திரைப்படம்

மீண்டும் வெளியாகிறது சேரனின் திருமணம் திரைப்படம்

மீண்டும் வெளியாகிறது சேரனின் திருமணம் திரைப்படம்

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2019 | 5:18 pm

இம்மாதம் வெளியான சேரனின் திருமணம் திரைப்படம் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வெளியாக உள்ளது.

மார்ச் மாத ஆரம்பத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.

கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைக்களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடு இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் திகதி 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்