பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இளைஞர் கைது

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இளைஞர் கைது

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இளைஞர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2019 | 3:53 pm

Colombo (News 1st) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, காயமேற்படுத்தி தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ – எல்லக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

எல்லக்கல பகுதியை சேர்ந்த 24 வயதான சந்தேகநபர், இன்று அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி, அவரிடமிருந்த தங்காபரணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்