பிரபல பாடகி அஞ்சலின் குணதிலக்க காலமானார்

பிரபல பாடகி அஞ்சலின் குணதிலக்க காலமானார்

by Staff Writer 29-03-2019 | 3:02 PM
Colombo (News 1st) பிரபல பாடகி அஞ்சலின் குணதிலக்க சற்றுமுன்னர் காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 79 ஆவது வயதில் அவர் இன்று காலமானதாக அரவது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இசை உலகில் மறக்க முடியாத ஒருவராகத் திகழ்ந்த அஞ்சலின் குணத்திலக்க, சிங்களத்தில் வௌிவந்த ஆதர அம்பரே பாடல் மூலம் பாடகியாக இசை உலகிற்கு அறிமுகமானார். இலங்கை இசை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அஞ்சலின் குணதிலக்க, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.