நாடு கடத்தப்பட்டவர்களை கண்காணிக்க பொலிஸ் குழு

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களை கண்காணிக்க பொலிஸ் குழு நியமனம்

by Staff Writer 29-03-2019 | 4:56 PM
Colombo (News 1st) துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளின் கண்காணிப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் 7 பொலிஸ் அதிகாரிகள் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.சி.ஏ.தனபால, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் அத்தியட்சகர்களான ருவன் குணசேகர, நிஷாந்த சொய்சா மற்றும் ஏ.கே.ஹேமந்த ஆகியோரும் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.