by Bella Dalima 29-03-2019 | 4:34 PM
தமிழக ஆளுநர் சென்ற வாகனத்தை சொகுசுக்காரில் பயணித்த தொழிலதிபர் முந்திச் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (28) இரவு சென்னையில் இருந்து வெளியூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது,
அவரின் வாகனத்திற்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்புத் தொடரணி சென்றுள்ளது.
இந்த நிலையில், குறித்த தொடரணிக்கு பின்பாகச் சென்ற கறுப்பு நிற சொகுசுக்காரொன்று ஆளுநரின் வாகனத்தை முந்திச்சென்றதனால் பரபரப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அக்காரை விரட்டிச் சென்ற பொலிஸார் அதனை மடக்கிப் பிடித்து தண்டம் விதித்ததாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.