தனியார் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரக்கொள்வனவு

தனியார் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய தீர்மானம்

by Staff Writer 29-03-2019 | 4:41 PM
Colombo (News 1st) மின்சார நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், தனியார் மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம், மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் நிறைவடைந்து, மின் கட்டமைப்பிலிருந்து அகற்றப்பட்ட மாத்தறை மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகளிலுள்ள இரண்டு மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதன்கீழ், 75 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.