கோலாகலமாக நடைபெற்ற பிளாட்டினம் விருதுவழங்கல் விழா

கோலாகலமாக நடைபெற்ற ஸ்போர்ட்ஸ்ஃபெஸ்ட் அலியான்ஸ் பிளாட்டினம் விருது வழங்கல் விழா

by Bella Dalima 29-03-2019 | 9:36 PM
Colombo (News 1st) ஸ்போர்ட்ஸ்ஃபெஸ்ட் - அலியான்ஸ் பிளாட்டினம் விருது வழங்கல் விழா இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விசேட அதிதிகள், சர்வதேச நட்சத்திரங்கள், விளையாட்டு வீர வீராங்கனைகள் ஆகியோர் இதில் பங்குபற்றினர். 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் பிரகாசித்த வீர வீராங்கனைகளுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றோர் விபரங்களாவன...
  • ஆண்டின் சிறந்த கனிஷ்ட தடகள வீராங்கனை - பாரமி வசந்தி
  • ஆண்டின் சிறந்த கனிஷ்ட  தடகள வீரர் - அருண தர்ஷன
  • ஆண்டின் சிறந்த பாடசாலை அணி - ரோயல் கல்லூரி கூடைப்பந்து அணி
  • ஆண்டின் சிறந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் - ஜனித்த ஜயசிங்க (குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி)
  • ஆண்டின் சிறந்த பல்கலைக்கழக வீரர் - எரந்தி தினுஷிகா (ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்)
  • ஆண்டின் சிறந்த விசேட தேவையுடைய விளையாட்டு வீரர்  - தினேஷ் பிரியந்த (இலங்கை இராணுவம்)
  • ஆண்டின் சிறந்த மோட்டார் விளையாட்டு வீரர் - அஷேன் சில்வா
  • ஆண்டின் சிறந்த அணி - கண்டி ரக்பி அணி
  • ஆண்டின் சிறந்த சர்வதேச அணி - தேசிய வலைப்பந்தாட்ட அணி
  • ஆண்டின் சிறந்த இராணுவ தடகள வீராங்கனை - தினுஷா ஹன்சினி (இலங்கை விமானப் படை)
  • ஆண்டின் சிறந்த இராணுவ தடகள வீரர் - இந்திக திசாநாயக்க
  • ஆண்டின் சிறந்த பயிற்றுவிப்பாளர் - பிரதீப் நிஷாந்த
  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை - சாமரி அத்தபத்து
  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் - திமுத் கருணாரத்ன
  • ஆண்டின் சிறந்த வீராங்கனை - அனுஷா கொடிதுவக்கு
  • ஆண்டின் சிறந்த வீரர் - இந்திக திசாநாயக்க
  • வாழ்நாள் சாதனையாளர் விருது - முத்தையா முரளிதரன்
  • ஆண்டின் ஜனரஞ்சக  வீரர் - லூசியன் புஷ்பராஜ்