காமினி திசாநாயக்கவின் மனைவி காலமானார்

காமினி திசாநாயக்கவின் மனைவி சிறிமா திசாநாயக்க காலமானார்

by Staff Writer 29-03-2019 | 7:14 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் மனைவி சிறிமா திசாநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் இயற்கை எய்தினார். தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் தனது 76 ஆவது வயதில் காலமானார் இவர் சிறிமா திசாநாயக்க , அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க ஆகியோரின் தாயாராவார். 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் இவர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.