மீரியபெத்த – ஹம்பராகலயில் ஏற்பட்ட மண்சரிவால் 36 பேர் பாதிப்பு

மீரியபெத்த – ஹம்பராகலயில் ஏற்பட்ட மண்சரிவால் 36 பேர் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2019 | 7:39 pm

Colombo (News 1st) பதுளை – மீரியபெத்த, ஹம்பராகல பகுதியில் நேற்று (28) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஹம்பராகல பகுதியில் ஏற்பட்ட இந்த மண்சரிவால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு லயன் குடியிருப்புகளை சேர்ந்த மக்களே இந்த மண்சரிவு அபாயத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் கொஸ்லந்த – நாகெட்டிய தோட்ட விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்