சட்டவிரோதமான முறையில் வெட்டப்படும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்

by Staff Writer 28-03-2019 | 1:27 PM
Colombo (News 1st) இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒருதொகை சட்டவிரோதமான முறையில் வெட்டப்படுவதாக, சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொம்ஸன் ரொய்ட்டர்ஸ் பவுன்டேசன் (Thomson Reuters Foundation) என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளப் பற்றுச்சீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இவ்வாறு தொழிலாளர்களிடமிருந்து சம்பளத்தை வெட்டுவது இலங்கையிலுள்ள கைத்தொழில் பிணக்குள் சட்டம், தொழிலாளர் சட்டம் ஆகியவற்றிற்கு முரணாணது என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.