IPL MATCH: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி

by Staff Writer 28-03-2019 | 11:45 AM
Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ​ கொல்கத்தா ஈடன் கார்டின்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைக் குவித்தது. கொல்கத்தா அணியின் முதலிரண்டு விக்கெட்களும் 36 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. க்ரிஸ் லின் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 24 ஓட்டங்களுடன் வௌியேறினார். அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நிதிஷ் ரானா 34 பந்துகளில், 7 சிக்ஸர்கள் 2 பௌன்டரிகளுடன் 63 ஓட்டங்களை விளாசினார். ஒன்ரோ ரசல் 17 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பௌன்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களைப் பெற்றார். ரொபின் உத்தப்பா 50 பந்துகளை எதிர்கொண்டு 67 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சான் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராஹூல் ஓர் ஓட்டத்துடன் வௌியேறினார். அதிரடித் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலால் இந்தப்போட்டியில் 20 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. மயாங் அகர்வால் 34 பந்துகளை எதிர்கொண்டு, ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளன்டரிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். 40 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் மில்லர் 6 சிக்ஸர்கள் 5 பௌன்டரிகளுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார். மந்தீப் சிங் 33 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஒன்ரோ ரசல் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.