இரண்டு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பாராளுமன்றத்தில் தோற்கடிப்பு

by Staff Writer 28-03-2019 | 8:08 PM
Colombo (News 1st) பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒரு பிரிவிற்கான ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 38 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். அதற்கமைய, 18 மேலதிக வாக்குகளால் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒரு பிரிவிற்கான ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேல் மாகாண மற்றும் பெருநகர் அபிவிருத்தி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாக்கெடுப்பைக் கோரியதுடன், அதன்போது ஆளுங்கட்சியின் 24 உறுப்பினர்களே சபையில் இருந்தனர். அதன்படி அந்த நிதி ஒதுக்கீடும் 24 க்கு 38 என தோல்வியடைந்தது.