பிளாட்டினம் விருது வழங்கல் விழா நாளை நடைபெறவுள்ளது

பிளாட்டினம் விருது வழங்கல் விழா நாளை நடைபெறவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2019 | 8:28 pm

Colombo (News 1st) விளையாட்டுத்துறையில் திறமையான வீர, வீராங்கனைகளை அடையாளப்படுத்தும் விசேட தருணம் நாளை (29) உதயமாகவுள்ளது.

ஸ்போர்ட்ஸ்ஃபெஸ்ட் Allianz பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் போது வீர, வீராங்கனைகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

விருது வழங்கல் விழா இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நாளை மாலை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

விழாவிற்கா ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையின் புகழ்பெற்ற பாடகர்கள், நடனக் கலைஞர்கள் உட்பட பெரும் திரளானோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

பிளாட்டினம் விருது வழங்கல் விழாவானது விளையாட்டுத்துறையில் ஆற்றல்களை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளை கௌரவித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும் இலங்கையின் ஒரேயொரு விருது வழங்கல் விழாவாகும்.

இந்த முறை விருது வழங்கல் விழாவில் 2017 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

பிரதான பிரிவில் 20 விருதுகள் பரிசளிக்கப்படவுள்ளதுடன், 10 ஊக்குவிப்பு பதக்கங்களும் வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் கிடைக்கக்கூடிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

விருது வழங்கல் விழா நாளை மாலை 6 மணி முதல் சிரச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்