சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியாகியுள்ளன

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியாகியுள்ளன

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2019 | 9:20 pm

Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் காண முடியும்.

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில், 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலன்கா திசிவரி வருஷவித்தான அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

மூன்று மாணவிகள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்