செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 27-03-2019 | 6:13 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் தேர்வுகள் திறமை அடிப்படையில் இடம்பெற வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 02. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 03. இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் சரணடைந்தவர்களின் பதிவுகள் அடங்கிய ஆவணம் கடந்த அரசாங்கத்திடம் இருந்ததாக, பா.உ., மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.  04. வௌிவிவகார அமைச்சரின் அதிகாரத்தை மனோ தித்தவெல்ல நடைமுறைப்படுத்துவதாக விமல் வீரவங்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.  05. மத்திய மலை நாட்டில் குறிப்பிடத்தக்களவு மழை பெய்யும் வரை நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்சார விநியோகத்தைத் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லைச்சுவர் அமைப்பதற்காக, ஒரு பில்லியன் டொலர் நிதியை பரிமாற்றுவதற்கு பென்டகன் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 02. காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடாத்தியுள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார். 02. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.