IPL Match: சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி

by Staff Writer 27-03-2019 | 8:30 AM
Colombo (News 1st) ஐ.பி.எல். (IPL) கிரிக்கெட் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. டெல்லி பெரோஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றது. ஷிகர் தவான் 7 பவுன்டரிகளுடன் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷப் பாண்ட் 13 பந்துகளில் 25 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். டுவைன் ப்ராவோ 3 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஷேன் வொட்சன் 26 பந்துகளில் 44 ஓட்டங்களை அதிரடியாக விளாசி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். சுரெஷ் ரெய்னா 30 ஓட்டங்களையும் கேதார் ஜாதவ் 27 ஓட்டங்களையும் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனி ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கைக் கடந்துள்ளது.