இன்றும் தொடரும் தாதியர்களின் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

by Staff Writer 27-03-2019 | 7:07 AM
Colombo (News 1st) தாதியர்கள் சிலர் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அரச ஒன்றிணைந்த தாதியர் சங்கத்தின் தலைவர் முரன்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். விபத்து உதவித்தொகையாக 10,000 ரூபாவை பெற்றுக்கொடுத்தல், சீருடைக்காக வழங்கப்படும் கொடுப்பனவை 25,000 வரை அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். நேற்று முதல் தாதியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தாதியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்படவுள்ள தீர்வு தொடர்பில் வினவுவதற்காக சுகாதார பணிப்பாளர் நாயகத்தை தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளிக்கப் போவதில்லை என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று கருத்து வௌியிட்டிருந்தார்.

ஏனைய செய்திகள்