ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்: இலங்கை குழு தெரிவு

ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கைக்குழு அறிவிப்பு

by Staff Writer 27-03-2019 | 1:22 PM
Colombo (News 1st) ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கட்டாரின் கலிபா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் 9 வீரர்களும் 7 வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர். அதன்படி, ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இமாஷ ஏஷானும் வினோஜ் சுரஞ்சயவும் பங்கேற்கின்றனர். 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் அஜித் பிரேமகுமாரவும் 800 மீற்றர் ஓட்டத்தில் ரசிரு சதுரங்கவும் ஆடவர் 1500 மீற்றர் ஓட்டத்தில் ஹேமந்த குமாரவும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். ஆடவர் நீளம் பாய்தல் போட்டிகளுக்காக பிரசாத் விமலசிறி இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளதுடன், ஈட்டி எறிதல் போட்டிகளில் சுமேத ரணசிங்க இலங்கைக்காக விளையாடவுள்ளார். ஆடவர் முப்பாய்ச்சல் போட்டிகளுக்காக கிரீஷான் தனஞ்சய பெயரிடப்பட்டுள்ளதுடன், மகளிர் முப்பாய்ச்சல் போட்டிகளில் விதுஷா லக்‌ஷானி இந்த போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். நட்சத்திர வீராங்கனைகளான நதிஷா ரத்நாயக்க மற்றும் நிமாலி லியனாரச்சி ஆகியோர் மகளிர் 400, 800 மற்றும் நான்கு தர 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். மகளிருக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க இலங்கை குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.