புரூஸ் யாட்லி காலமானார்

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் புரூஸ் யாட்லி காலமானார்

by Staff Writer 27-03-2019 | 10:37 PM
அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான புரூஸ் யாட்லி காலமானார். அவரது மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இரங்கல் வெளியிட்டுள்ளது. புரூஸ் யாட்லி 33 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியா சார்பாக விளையாடியுள்ளார். 71 வயதுடைய அவர் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா சார்பாக டெஸ்ட் அரங்கில் 126 விக்கெட்களை வீழ்த்தி அதிசிறந்த பந்து வீச்சாளராகவும் புரூஸ் யாட்லி திகழ்ந்துள்ளார். அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராகவும் சில நாட்கள் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.