லிட்ரோ எரிவாயு நிறுவன முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான நீல் பண்டார ஹப்புஹின்ன விடுதலை

லிட்ரோ எரிவாயு நிறுவன முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான நீல் பண்டார ஹப்புஹின்ன விடுதலை

லிட்ரோ எரிவாயு நிறுவன முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான நீல் பண்டார ஹப்புஹின்ன விடுதலை

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2019 | 7:40 pm

Colombo (News 1st) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான நீல் பண்டார ஹப்புஹின்னவை கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

லிட்ரோ எரிவாயு நிறுவன நிதி மோசடி உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளை, பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை விசாரிக்காமல் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நீதிமன்றம், நீல் பண்டார ஹப்புஹின்னவை மாத்திரம் விடுதலை செய்வதற்கு தீர்மானித்ததுடன், ஏனைய மூன்று பிரதிவாதிகளினதும் கோரிக்கையை நிராகரித்தது.

நீதிமன்றம் வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சி விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை மே மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்