வௌிவிவகார அமைச்சரின் அதிகாரம் மனோ தித்தவெல்ல கையில்: விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

by Bella Dalima 26-03-2019 | 7:31 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சரின் அதிகாரத்தை மனோ தித்தவெல்ல நடைமுறைப்படுத்துவதாக இன்று பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார். அடிமை அரசாங்கத்தில் சந்திரிக்காவின் சீடன் மனோ தித்தவெல்ல ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். மனோ தித்தவெல்ல என்பவர் டீல்கள் மூலம் வருமானத்தைப் பெற்று நாட்டை காட்டிக்கொடுக்கும் குண்டர் எனவும் பணம் கிடைத்தால் எந்தவொரு கீழ்த்தரமான செயலையும் செய்வார் எனவும் குறிப்பிட்ட விமல் வீரவன்ச, அவரை இந்நாட்டின் வௌிவிவகார கொள்கையைத் தீர்மானிக்க இடமளிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இந்நாட்டின் வௌிவிவகார அமைச்சரின் அதிகாரங்களை தாவித்திரியும் மனோ தித்தவெல்லவிடம் எவ்வாறு கையளிக்க முடியும் எனவும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். பாராளுமன்றில் இடம்பெற்ற வௌிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.